எருசலேம் தேவாலயத்தில் பவுலின் சாட்சி.
21: 27-30 பரிசுத்த இடம்:
எருசலேம் தேவாலயத்தின் உள்ளே ஒரு தடுப்புச் சுவர் உள்ளது. அதுவே யூதரையும் புறவின மக்களையும் பிரிக்கும் எல்லை. அந்த சுவரைத் தாண்டி செல்ல புறவின மக்களுக்கு அனுமதி இல்லை (எபே 2:14).
அந்த சுவரில் இப்படி எழுதப்பட்டிருக்கும்.
"No foreigner may enter with the barricade which surrounds the sanctuary and enclosure. Anyone caught doing so will himself to blame for his ensuring death."
'தேவாலயம் மற்றும் அதன் சுற்றுச்சுவரைச் சுற்றியிருக்கும் இந்த தடுப்புச் சுவரைத் தாண்டி எந்த வெளி இனத்தவரும் உள்ளே நுழையக்கூடாது. மீறினால் பிடிபடும் எவரும் அவரது மரணத்திற்கு அவர் தாமே காரணம்." ரோம அரசாங்கம் இந்தச் சிறப்பு உரிமையை யூதர்களுக்கு வழங்கியிருந்தது.
தேவாலயத்தில் கலவரம் வெடிக்க, பவுல் கைது செய்யப்பட இந்த சட்டம் ஒரு ஆரம்பப் புள்ளியாக அமைந்தது.
பவுல் நான்கு நசரேய விரதமிருந்த யூதர்களுடன் அவர்கள் பலிகளுக்கான செலவைச் செலுத்தி பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொண்டிருந்தார். ஏழு நாட்கள் அமைதியாகக் கடந்தது.
அப்போது சில ஆசியர்கள் பவுலை தேவாலயத்தில் பார்த்தனர். எபேசுவிலிருந்து வந்திருந்த யூதர்களுக்கு துரோப்பீம் நன்கு தெரியும். பவுல் எங்குச் சென்றாலும் அவரது புறவின நண்பர்களை உடன் கூட்டிச் செல்வது உண்டு.
இப்போது பவுல் ஆலயத்தில் இருக்கிறார். ஆகவே நிச்சயம் அவரது புறவின நண்பர்களைத் தேவாலயத்திற்குள் அழைத்துக் கொண்டு வந்திருப்பார் என அவசரமாக முடிவு செய்தனர். அந்த நம்பிக்கையில், ''பவுல் கிரேக்கர்களை உள்ளே அழைத்துக்கொண்டு வந்து பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப் படுத்தி விட்டார்'' எனக் கூக்குரலிட்டனர்.
உடன் பெரும் கூட்டம் கூடியது. பவுலைப் பிடித்து தேவாலத்திற்க்கு வெளியே இழுத்துக் கொண்டு வந்தனர். ஆலயத்தின் கதவுகள் பூட்டப்பட்டது. அவர்கள் பவுலை கொலை செய்ய முயற்சி செய்கையில் ரோமர் படை உள்ளே நுழைந்தது.
இந்த சம்பவம் எபேசுவில், ''தியான்னாள் ஆலயத்தில்'' இதே விதத்தில் நிகழ்ந்த கலவரத்தை நினைவு படுத்துகிறது. இந்த வசனங்களை ஒப்பிட்டுப் பாருங்கள்.
அப் 19:29 பட்டிணம் முழுவதும் கலகம். அவர்கள் ஒருமனப்பட்டுப் பாய்ந்து கொண்டு ஓடினார்கள்.
அப் 21:30 நகரம் முழுவதும் கலக்கம். மக்கள் கூட்டமாய் கூடி பவுலை இழுத்துக்கொண்டு போனார்கள்.
அப் 19:32 கூட்டத்தில் அமளி. சிலர் இப்படியும் சிலர் அப்படியும் பேசினார்கள். தாங்கள் கூடி வந்த காரணம் இன்னதென்று அநேகருக்குத் தெரியவில்லை.
அப் 21:34 மக்கள் பல விதமாகச் சத்தமிட்டனர். சந்தடியினாலே எதற்காக இந்த கலவரம் என நிச்சயமாக அறிய முடியவில்லை.
"Every mob, in its ignorance and blindness and bewilderment , is a League of Frightened Men that seeks reassurance in collective action" - Max Lerner wrote in "The Unfinished Country"
"கலவர கும்பல் என்பது பயந்த கோழைகளின் கூட்டம் ஆகும். அறியாமை, புரிந்து கொள்ளாத குருட்டுத்தன்மை மற்றும் கட்டுக்கடங்காமல் செயல் புரிவது அந்த கூட்டத்தின் இயல்பு. ஒரு கும்பலாக மட்டுமே அவர்கள் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவர்."
Benjamin Franklin said that a mob was "a monster with heads enough, but no brains."
கலவர கும்பல் என்பதில் ''தலைகள் எண்ணிக்கை மிகுதியாக இருக்கும். ஆனால் அது மூளை செயல்படாத ஓர் வெறி பிடித்த கூட்டம்.''
1: 31-40 -கிலவுதியு லீசியா (Claudius Lysias):
லீசியா வந்தவுடன் பவுலை அடிப்பது நிறுத்தப்பட்டது. பவுலை குற்றம் கூறியவர்கள் நழுவி ஓடிவிட்டனர். ஏனெனில் அவர்கள் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என அறிந்தவுடன் ஓடிவிட்டனர். பவுலுடன் புறவின நண்பர்கள் ஒருவரும் இல்லை.
லீசியா விசாரித்த போது ஒருவராலும் தெளிவான குற்றச்சாட்டைச் சொல்ல முடியவில்லை. அவர் என்ன குற்றம் செய்தார் என்பதை அறியும் படிக்கு விசாரணை செய்யக் கோட்டைக்குள் அழைத்துச் செல்ல முற்பட்டார். மக்கள் கூட்டத்தின் நிமித்தம் போர் வீரர்கள் பவுலை படிகளில் தூக்கிச் சென்றனர். மக்கள் ஆவேசமாக 'இவனை அகற்றும்' என உக்கிரமாகக் கத்தினர்.
இப்போது பவுலை எதற்காக அடித்தார்கள் எனக் கூடியிருந்த யாருக்கும் தெரியவில்லை. குற்றம் இன்னதென்று விசாரிக்காமலே பவுல் இரண்டு சங்கிலிகளினால் கட்டப்பட்டார் (அப் 21:11).
இந்த சம்பவம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசாரித்த சூழலை நினைவு படுத்துகிறது
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை கைது செய்த பின்பு அவர் மேல் என்ன குற்றம் சாட்டுவது என ஆலோசனை செய்தனர்!!!
அவர் பொது மக்கள் மத்தியில் அழைத்து வரப்பட்ட போதும், இவ்விதமாகவே மக்கள் ''சிலுவையில் அறையும்'' என கூக்குரலிட்டனர் (லூக்கா 23:18, 21 & யோவான் 19:15).
பவுல் லீசியாவுடன் கிரேக்க மொழியில் பேசினார். கிரேக்க மொழியில் பேசியதைக் கேட்டதும் அந்த நாட்களில் பெரும் கலகம் விளைவித்த ஒரு எகிப்தியன் என பவுலை நினைத்தார்.
ஆனால் பவுல் தாம் ஓர் யூதன் என்றார். மக்களுடன் பேச விரும்புவதாகக் கூறினார். லீசியா பேசுவதற்கு அனுமதி அளித்தார். அதன் மூலம் அவர் செய்த குற்றம் என்னவென்று அறிய விரும்பினார். ஆனால் லீசியாவால் கடைசி வரை அதை அறிய முடியவில்லை (அப் 23:23-30).
Message taken from : "The Wiersbe Bible Commentary" by Warren W. Wiersbe.
படங்கள் இணையத்திலிருந்து நன்றியுடன்.,




