விழிப்புடன் இருங்கள்.
தியான பகுதி: அப்போஸ்தலர் நடபடிகள் - 20: 28-38
பவுல் தமது மூன்றாவது மிஷனரி ஊழியத்தை எபேசு நகரில் நிறைவேற்றி விட்டு எருசலமுக்கு திரும்பப் புறப்படுகிறார். இந்தப் பகுதியில் மீண்டும் ஊழியம் செய்யும் திட்டம் அவருக்கு இல்லை. அவர் மனதில் சபையின் எதிர்காலம் குறித்த பாரம். விசுவாசிகளின் ஆவிக்குரிய வாழ்க்கை குறித்த கவலை. அவர்கள் விசுவாசத்தில் நிலைத்து நிற்க வேண்டும் என்ற வாஞ்சை. ஆக விடை பெறும் முன்பாக மிகுந்த மன துக்கத்துடன் திருச்சபை தலைவர்களுக்கு தமது கடைசி செய்தியை அளிக்கிறார்.
This is a message for the church elders. Pastors. leaders.
Acts 20: 28-38 இந்தப் பகுதியில் திருச்சபை எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும் அபாயம் குறித்து எச்சரிக்கை உள்ளது. அதை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். அந்த போராட்டங்களை முறியடித்துச் சபையை சபையை பாதுகாக்க வேண்டும். விசுவாசிகள் பின்வாங்காது ஆவிக்குரிய முன்னேற்றம் அடையச் செய்ய வேண்டிய உபதேசம் உள்ளது. அவற்றைக் கடைப் பிடிக்க வேண்டும்.
I. Acts 20:28 - திருச்சபை முக்கியம்
இந்த வசனத்தில் தேவன் - சுய இரத்தம் - பரிசுத்த ஆவியானவர் - மந்தை - உங்களைக் குறித்த எனும் வார்த்தைகள் மிக முக்கியமானது.
திருச்சபை குறித்து சாதாரணமாக, எளிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அது தேவனுக்கு மிக முக்கியமான ஒன்று.
ஏனெனில் திருச்சபை அவர் பெயரில் இயங்குவது. The Church of God.
அது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிற்க்கு மிக மிக முக்கியமானது. ஏனெனில் திருச்சபை அவர் தமது சொந்த இரத்தத்தைச் சிந்திச் சம்பாதித்து உருவாக்கியது.
பரிசுத்த ஆவியானவர் திருச்சபையைப் போதித்து வழி நடத்துகிறார். அது அவரின் கூடாரம்.
It is a serious thing to be a Church leader.
A. Acts 20:29 - Dangers Around Us:
பவுல் இந்த வசனத்தில், திருச்சபைக்கு வெளியிலிருந்து வரும் அபாயம் குறித்து எச்சரிக்கிறார். அதை "கொடிதான ஓநாய்கள்" எனும் வார்த்தையால் குறிப்பிடுகிறார்.
திருமறையில் ஓநாய்கள் என்பது "கள்ள போதகர்களை" குறிக்கிறது.
மத்தேயு 7:15
கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.
மத்தேயு 10:16
ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறது போல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களாயும் புறாக்களைப் போல கபடற்றவர்களுமாய் இருங்கள்.
கள்ள போதகம் என்பது "புளித்த மாவு" போல (மாற்கு 8:15). ஒரு தவறான உபதேசம் சபையின் மொத்த ஆவிக்குரிய முன்னேற்றத்தையும் அழித்து விடும்.
கள்ள தீர்க்கதரிசிகள், போதகர் முக்கிய நோக்கம் பணம், சுய நலன். அதற்காக அவர்கள் சபையை ஏமாற்றி மோசம் செய்து விசுவாசிகளை அடிமைப் படுத்துவார்கள். (2 Peter 2: 1-3)
How important it is that believers know the word of God to detect and defeat these religious recketeers.
B. Acts 20:30 - Dangers Among Us:
இந்த வசனத்தில், திருச்சபை உள்ளே இருக்கும் விசுவாசிகள் கலகம் உருவாகிறது. அதற்கு முக்கிய காரணம் Power and Position". தனக்கு முக்கியம் இல்லை, மதிப்பு இல்லை என்று சபைக்கு எதிராகச் செயல்படும் மக்கள் சபை சரித்திரம் முழுவதும் உள்ளார்கள். அதிகாரத்தில் இருப்பதற்காகக் குழுக்கள் உருவாக்கி சபையைப் பிளவு படுத்தி பெரும்பாலான விசுவாசிகள் ஆவிக்குரிய வாழ்க்கையை அழிக்கும் கூட்டம் சபைக்குள் வரும் என பவுல் எச்சரிக்கிறார் (3 John 9-11).
C. Acts 20:31-35 - Dangers Within Us:
இந்த வசனத்தில், வெளியிலிருந்து தாக்கும் போராட்டங்களை விட நமக்கு உள்ளிருந்து எழும்பும் தீய எண்ணங்கள் தன் அதிகமாக நமது ஆவிக்குரிய வாழ்க்கையை அழிக்கும் என பவுல் எச்சரிக்கிறார்.
பவுல் நம்மை அழிக்கும் 5 குணங்களைக் குறிப்பிட்டு எச்சரிக்கை செய்கிறார்.
1. Acts: 20:31 - Carelessness - அலட்சியம்:
இந்த வசனத்தில், விழிப்புடன் இருக்கத் தவறுவது அல்லது அலட்சியமாக இருப்பது நமது ஆவிக்குரிய வாழ்க்கையை அழிக்கும்.
இன்று நாம் கடவுளின் பிள்ளையாக வாழ எத்தனை ஊழியர்கள் உழைத்தனர் என்பதை மறந்து போகக் கூடாது.
இந்த நிலையை அடையக் கடந்த காலத்தில் நாம் கண்ணீர் விட்ட நாட்களை மறக்கக் கூடாது.
பவுல் எச்சரிக்கிறார்: நான் இரவும் பகலும் கண்ணீரோடு புத்தி சொன்னேன். இடை விடாமல் ஊழியம் செய்தேன். ஒவ்வொருவருக்கும் பணி செய்தேன். அதை நினைவில் வைத்திரு. விழித்திரு. (Heb 13:7-8).
Paul's warning and weeping should be constant reminder to us to take our spiritual responsibility seriously.
2. Acts: 20:32 - Shallowness - நுனிப்புல்:
இந்த வசனத்தில், பரிசுத்தம், பக்தி விருத்தி இந்த இரண்டு வார்த்தைகள் முக்கியமானது.
நம் ஆவிக்குரிய வாழ்க்கை சரியாக இருக்க வேதம் வாசிப்பது மற்றும் இறை வேண்டுதல் இவை இரண்டும் சம அளவில் இருக்க வேண்டும்.
ஜெபம் ஆண்டவரோடு பேசுவது. வேத தியானம் இறைவன் நம்முடன் பேசுவது. ஜெபம் உணர்வுப்பூர்வமான தொடர்பு. வேதத்தைத் தியானிப்பது அறிவுப்பூர்வமானது. இவை இரண்டும் இணைந்து செயல் புரிவது அவசியம்.
வேதம் நம்மைப் பரிசுத்தம் செய்கிறது இறை வேண்டுதல் பக்தி விருத்தி அடைய உதவுகிறது. (1 Samuel 12:23 / Acts 6:4)
பவுல் ஒரு தலைவர் தனது வாழ்க்கையைச் சரியாக அமைக்காமல் திருச்சபையை வழி நடத்த முடியாது என எசசரிக்கிறார.
3. Acts: 20:33 - Covetousness - இச்சியாதிருப்பயாக:
இந்த வசனத்தில், நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய மூன்றாவது குணம் "இச்சியாதிருப்பயாக."
இச்சியாதிருப்பயாக என்பதன் பொருள்: மற்றவர்களது பொருளை அனுபவிக்க வேண்டும் என ஆசைப்படக் கூடாது. மற்றவர்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என ஆசைப்படக் கூடாது.
அது மட்டுமல்லாமல், நம்முடைய தேவைக்கும் அதிகமாக வாங்கி குவிப்பதும் இச்சை தான். தேவையற்ற பொருட்களைத் திரும்பத் திரும்ப வாங்குவது பேராசை.
நீங்கள் ஒரு புதிய பொருளை வாங்கினால், உங்களிடம் உள்ள பழைய பொருட்களைத் தேவைப் படுபவர்க்குக் கொடுங்கள்.
"இச்சியாதிருப்பயாக." என்பது பத்து கற்பனைகளில் கடைசி கட்டளை.
யாத்திராகமம் 20:17:
“அயலானின் வீட்டை இச்சிக்கக்கூடாது. அவனது மனைவியை விரும்பவேண்டாம். அவனது வேலைக்காரனையோ வேலைக்காரியையோ, ஆடு மாடுகளையோ, கழுதைகளையோ எடுக்க வேண்டாம். இன்னொருவனுக்குச் சொந்தமான எந்தப் பொருளையும் வஞ்சித்து எடுத்துக்கொள்ளக்கூடாது!”
இந்த கட்டளை மீறப்படும் போது மற்ற கட்டளை மீறப்படும். பிறர் பொருள் மீது வைக்கும் ஆசை பொய் சொல்ல வைக்கும். திருடத் தூண்டும். கடைசியில் கொலையில் முடியும்.
பொருளாசை என்பது தேவனுக்கு விரோதமான ஆராதனை என வேதம் கூறுகிறது (Eph 5:5, 1 Col 3:5). உண்மை ஊழியனுக்குப் பண ஆசை, இழிவான ஆதாயம் விரும்பும் இச்சை இருக்கக் கூடாது என வேதம் கூறுகிறது (1 Tim 5:18).
4. Acts: 20:34 - Laziness - சோம்பல்:
பவுல் வேலை செய்து தனது தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டார். ஊழியத்தில் ஊதியம் பெறுவது தவறல்ல (Luke 10:7; 1 Tim 5:18). But they be should certain that ther are really earning those salaries
பவுல் தமது அப்போஸ்தல அதிகாரத்தைப் பயன்படுத்தி வேலை செய்யாமல் இருக்க முடியும். ஆனால் அவர் முன் மாதிரியாக இருக்க விரும்பினார்.
இதன் பொருள் நாம் சுறுசுறுப்புடன் இயங்க வேண்டும். சோம்பல் நம் ஆவிக்குரிய முன்னேற்றத்தை அழித்து விடும். (Prov 24: 30-34).
5. Acts: 20:35 - Selfishness - சுயலாபம்:
இறுதியாக பவுல் ஆதாயத்திற்காக இறைவனைத் தேடுவது, ஊழியம் செய்வது தவறு என எச்சரிக்கிறார் (1 Tim 6:5-12).
Ministry means giving not getting. ஊழியம் என்பது கொடுப்பது. பெறுவது அல்ல. அதன் பொருள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் பின் பற்றுவது. அவர் காண்பித்த பாதையில் நடந்து செல்வது.
"வாங்குகிறதை பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்." எனும் வசனம் பாக்கிய வசனத்தில் இல்லை.
இந்த வசனத்தை ஆண்டவர் உபதேசித்தார் என்று மற்ற சுவிஷேச பகுதியிலும் எழுதப் பட வில்லை.
ஆனால் பவுல் ஆண்டவர் இந்த வார்த்தைகளைக் கூறியதாகச் சொல்கிறார். அதன் பொருள் மற்ற வார்த்தைகள் ஆண்டவர் பிரசங்கம் செய்தார். இந்த வசனத்தை வாழ்ந்து காண்பித்தார். ஹே demonstrated it. அவர் தம்மையே முழுவதும் அர்ப்பணித்தார். அவர் வாழ்வில் சுய நலம் துளியும் இல்லை.
Dr. Earl. V. Pierce used to call "the supreme Beatitude" because, unlike the other beatitudes, it tells us how to be more blessed. இது அதிக பாக்கியம்.
The blessing doesn't come in accumulating wealth, but in sharing it.
Amen.
Message taken from : "The Wiersbe Bible Commentary" by Warren W. Wiersbe.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக